பெரியார் திரைப்பட சர்ச்சை
இயக்குனர் ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதும், அதில் பெரியார் வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக நடிக்க குஷ்பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இத்திரைப்படத்திற்காக திராவிட கழகத்தினர் தமிழ்நாடு முழுதும் நிதி திரட்டுவதாகவும் செய்தி வெளி வந்தது. இதைத் தொடர்ந்து, மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றும், அப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தமிழச்சி நடிக்க ஒரு தமிழச்சி கூடவா கிடைக்கவில்லை என்றும் தி.க வினர் கொதிந்தெழுந்து விட்டனர் !
ஒரு வேடத்தில் நடிப்பதற்கு, ஒருவர் ஓரளவு திறமையும், அனுபவமும் உள்ள நடிக/நடிகையாக இருந்தாலே போதுமானது என்பது பகுத்தறிவாளர்களுக்குக் கூட புரியாமல் போனது ஆச்சரியாமாக இருக்கிறது ! மேலும் அவர் எந்த மொழிக்காரராக இருந்தால் தான் என்ன ? 'பாரதி' திரைப்படத்தில் நடித்த ஷிண்டே மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தானே! தமிழ் தெரியாதவராக இருந்தும் அற்புதமாகவே நடித்திருந்தார்.
மேலும், குஷ்பூ என்ற தனிநபரின் கற்பு குறித்த கருத்துக்கள் தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக, அவர் மணியம்மையாக நடிப்பதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது சற்றும் சரியில்லை. குஷ்பூ, பல திரைப்படங்களில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்திருப்பதை சுட்டிக்காட்டி கு.திருமாறன் என்ற தி.க. காரர், குஷ்பூவைப் போலத் தான் மணியம்மை இருந்திருப்பாரோ என்ற எண்ணம் இப்போதைய தலமுறையினரிடம் உருவாகி விடுமோ என்ற பதற்றத்தில் தான் திகவினர் ஆவேசப்படுவதாகக் கூறியிருக்கிறார் ! இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு கருத்தா ???? இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ??? முதலில், அவரின் இக்கருத்து கண்டனத்துக்குரியது !
குஷ்பூ போலவே, கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள மீனா, ரோஜா போன்ற நடிகைகள், சில திரைப்படங்களில் அம்மன் வேடமேற்று நடித்திருக்கின்றனர். இது அம்மன் பக்தர்களை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ? மேலும் திகவினரை விட மெஜாரிட்டியில் இருக்கும் ஆத்திகர்கள் யாரும் இதற்கு கொதித்தெழுந்ததாக நினைவில்லை ! சத்யராஜ் நாத்திகராக இருப்பதால் பெரியாராக நடிக்க தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், தனது ஆரம்ப கால திரைப்படங்களில் வில்லனாக, பல கதாநாயகிகளை கற்பழிப்பவராக நடித்திருக்கிறார். எனவே, சத்யராஜ் போலவே பெரியார் இருந்திருப்பாரோ என்று கூறி அவரை எதிர்ப்பது எவ்வளவு அபத்தமானதோ, அது போலத் தான் குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து கலாட்டா செய்வதும் கூட !!!
இறுதியாக, இத்தனை ஆண்டுகள் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நல்லதொரு திரைப்படமாக எடுக்க பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்ய முன் வந்த ஞானராஜசேகரனின் (நடிக நடிகையரை தேர்ந்தெடுக்கும்) சுதந்திரத்தில் தலையிட்டு அவரை மிரட்டிப் பணிய வைக்கும் முறையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வகையிலும் நியாயமான செயலாகத் தோன்றவில்லை !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
38 மறுமொழிகள்:
//இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ???
appadiyaa? :-)
சர்ச்சையினுள் போகவிரும்பவில்லை என்றாலும்
//இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ???
//
நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள்(அறிவிலிகள் என்று நீங்கள் சொன்னதால் அதையே நானும் உபயோகிக்கிறேன்)இன்னமும் பலர் உள்ளனர், உதாரணம்... ஹி ஹி அதை நான் சொல்லவும் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்.....
பாலா இடஒதுக்கீடு தொடர்பான உங்கள் உரக்க சிந்தனை பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன் இன்னும் அது வரவில்லை, நீங்கள் அதை தடைசெய்திருந்தால் விட்டுவிடுங்கள், உங்கள் கவனத்திற்கு வரவில்லையென்றால் வெளியிடுங்கள்....
கற்பு த்த்துவத்தையே இழிவாக பேசிய ராமசாமி அவர்களுக்கு குஷ்பு அவர்கள் நடிப்பதில் சங்கடம் எதுவும் இருக்க முடியாது. மாறாக உவப்பே!
தமிழை இழிவாக பேசிய ராமசாமி அய்யா அவர்களுக்கு தமிழ் பற்றுள்ள தமிழர்கள் நடிப்பது பொருத்தமில்லை. அதனால், வேறு மாநிலத்திலிருந்து வந்து நடிப்பவர்கள் ரொம்பவும் பொருத்தம்.
பூணூலை அறுத்தும், குடுமியை அறுத்தும் பார்ப்பனீயத்தை ஒழிப்பேன் என்று காட்டுமிராண்டித்தன இயக்க வழிமுறைகளை வகுத்தவருக்கு கற்பழிக்கும் வில்லன் தானாக உருமாருவது ஒன்றும் சங்கடமாய் இருக்காது என்பதும் நிச்சயம்.
நன்றி
முகமூடி ஒரு தீர்க்கதரிசின்னு யாரும் சொல்லிடாதீங்க எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ;)
தி.க.வின் இந்த எதிர்ப்பு பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது.... தற்போது திராவிட கழகம், கழகமாக இருக்கிறதா? அல்லது ஒரு மடமாக செயல்படுகிறதா என்ற குழப்பம் நீண்ட நாளாக நிலவுகிறது.
நியாயமான கேள்விகள் ? ஆனா நாங்க பெரியார் சமாதிக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருக்கிறோம்,ஒரே சத்தமா இருக்குது, இப்ப சரியா உங்க கேள்விகள் எங்க காதுல விழல...சாரி.
//தற்போது திராவிட கழகம், கழகமாக இருக்கிறதா? அல்லது ஒரு மடமாக செயல்படுகிறதா என்ற குழப்பம் நீண்ட நாளாக நிலவுகிறது //
என்ன செய்றது மடமெல்லாம் இப்ப விபச்சார கிளப் ஆகிப்போச்சே, அது மாதிரி கழகமும் ஒரு பரிணாம வளற்சி அடைந்து போச்சோ என்னவோ.
ராமதாஸ் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு குட்டிச்சுவராய் போயிருக்கும். அன்றைக்கு பெரியார் பண்ணியதை இன்று ராம்தாஸ் பண்ணுவதால்தான் ஏதோ மானம் மரியாதையோடு இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
ராமதாஸ் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு குட்டிச்சுவராய் போயிருக்கும். அன்றைக்கு பெரியார் பண்ணியதை இன்று ராம்தாஸ் பண்ணுவதால்தான் ஏதோ மானம் மரியாதையோடு இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
:)
கோமல் சுவாமிநாதனின் பழைய பேட்டி ஒன்று ஞாபகம் வருகிறது:-))
//அறிவிலிகளா என்ன? // அதானே?
May I submit that they should replace Kushboo with Namitha
for this role.If not Namitha
atleast give that chance to
Teja Sri or Raki Sawant or
Rahasiya.
//ராமதாஸ் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு குட்டிச்சுவராய் போயிருக்கும். அன்றைக்கு பெரியார் பண்ணியதை இன்று ராம்தாஸ் பண்ணுவதால்தான் ஏதோ மானம் மரியாதையோடு இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
//
ஹையோ! ஹையோ!!
ரஜினி ராம்கி,
நன்றி ! ஆனால், இனி மேல், ஒரு வார்த்தையில் பின்னூட்டம் இடாதீர்கள் :) நான் கொஞ்சம் வெண்குழல் விளக்கு ;)
குழலி,
//உதாரணம்... ?¢ ?¢ அதை நான் சொல்லவும் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்.....
//
யாருன்னு தான் தனிமடலில் சொல்லுங்களேன், தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன் :)
//நீங்கள் அதை தடைசெய்திருந்தால் விட்டுவிடுங்கள், உங்கள் கவனத்திற்கு வரவில்லையென்றால் வெளியிடுங்கள்....
//
உங்களுடைய பின்னூட்டத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் எப்போதுமே வராது என்று நம்புகிறேன் ! பார்த்தவுடன் வெளியிட்டு விட்டேனே !!!
ஜயராமன்,
நன்றி ! கொஞ்சம் கோபமாய் இருக்கிற மாதிரி தோன்றிகிறது ;-)
முகமூடி,
//முகமூடி ஒரு தீர்க்கதரிசின்னு யாரும் சொல்லிடாதீங்க எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ;)
//
ஒங்க பதிவை எப்படியும் படிச்சுருவேங்க !!! ஒங்க தீர்க்கதரிசனமும், கூச்ச சுபாவமும் நான் அறியாததுங்களா ;-)
சந்திப்பு,
//தற்போது திராவிட கழகம், கழகமாக இருக்கிறதா? அல்லது ஒரு மடமாக செயல்படுகிறதா என்ற குழப்பம் நீண்ட நாளாக நிலவுகிறது
//
உங்களுக்கிருக்கிற குழப்பம் பல பேருக்கு இருக்கு பாஸ் !!!
காஞ்சி,
//நியாயமான கேள்விகள் ? ஆனா நாங்க பெரியார் சமாதிக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருக்கிறோம்,ஒரே சத்தமா இருக்குது, இப்ப சரியா உங்க கேள்விகள் எங்க காதுல விழல...சாரி.
//
ஒங்களுக்கு ஓவர் குசும்பு தான் :) பாத்து, டின் கட்டிடுவாங்க ;-)
//என்ன செய்றது மடமெல்லாம் இப்ப விபச்சார கிளப் ஆகிப்போச்சே,
//
தல, எல்லா மடமும் அப்படியில்ல, என்ன, ஒரு மடம் தான் அப்படி பேர் வாங்கிடுச்சு ;-)
இதுக்கு ஒரு சிச்சுவேஷன் பாட்டு கூட இருக்கு,
" காலத்தின் கோலம் புரிந்தது, ஞானி தானே நானும் ....வாழ்க்கையே வேஷம் ..."
பாலமுருகன்,
//ராமதாஸ் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு குட்டிச்சுவராய் போயிருக்கும். அன்றைக்கு பெரியார் பண்ணியதை இன்று ராம்தாஸ் பண்ணுவதால்தான் ஏதோ மானம் மரியாதையோடு இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
//
சத்தியமா மறக்க மாட்டோம் ;-) ஆனால், பெரியார் பண்ணினதுக்கும், ராமதாஸ் பண்றதுக்கும் என்ன சம்மந்தம்-னு தான் புரியவே மாட்டேங்குது !!!!
Anonymous,
நன்றி ! எதுக்கு ஸ்மைலி போட்டீங்க ? விளக்கமாக சொல்லுங்க, பாஸ் !!!
அன்பு சுரேஷ்,
நன்றி ! அதென்ன கோமல் சுவாமிநாதனின் பழைய பேட்டி ? புரியலையே !
சங்கரா,
கருத்துக்கு நன்றி !
என்றென்றும் அன்புடன்,
பாலா
Anonymous,
//May I submit that they should replace Kushboo with Namitha
for this role.If not Namitha
atleast give that chance to
Teja Sri or Raki Sawant or
Rahasiya.
//
This is "three" much :)
சீனு,
//
ஹையோ ! ஹையோ !
//
ஏங்க, இப்படி தலைல அடிச்சுக்கறீங்க ;-)
//ஏங்க, இப்படி தலைல அடிச்சுக்கறீங்க ;-) //
தலையில அடிச்சுகலீங்க...அவரு ராமதாசு பத்தி சொல்லக்கேட்டு சிரிப்பு வந்துடுச்சு.
//மீனா, ரோஜா போன்ற நடிகைகள், சில திரைப்படங்களில் அம்மன் வேடமேற்று நடித்திருக்கின்றனர்.//
நம்ம கே.ஆர். விஜயாக்காவ விட்டுடீங்க!!
//மேலும் திகவினரை விட மெஜாரிட்டியில் இருக்கும் ஆத்திகர்கள் யாரும் இதற்கு கொதித்தெழுந்ததாக நினைவில்லை//
என்று கொதித்து எழுந்திருக்கிறார்கள்??
manasu,
Thanks for your visit and comments !
சீனு,
//தலையில அடிச்சுகலீங்க...அவரு ராமதாசு பத்தி சொல்லக்கேட்டு சிரிப்பு வந்துடுச்சு.
//
:))))))))))))))
Be careful ! Kuzali may get annoyed ;-)
குஷ்பு மணியம்மை அவர்களாக ஏன் நடிக்கக் கூடாது? நான் ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி போட்ட பதிவை விட அதிகப்பட்சமாகவே ஈ.வே.ரா. அவர்கள் கூறியிருக்கிறார். ஆண் ஆசை நாயகி வைத்துக் கொள்கிறார், அதே போல பெண்ணும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
நான் கூறியதற்கு என்னை பற்றி பெண்ணைக் கூட்டிக் கொடுப்பவன் என்ற ரேஞ்சுக்கு பேசிய இறைநேசன் போன்றவர்கள் அதே மாதிரி பெரியாரைப் பற்றிக் கூறத் துணிவார்களா?
நீங்கள் கூறியது போல பல கற்பழிப்பு காட்சிகளில் தூள் கிளப்பிய சத்யராஜ் பெரியார் வேடத்துக்கு பொருந்தினால், குஷ்புவும் மணியம்மையின் வேடத்துக்குத் தகுதியானவரே.
இது வெறும் நடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளாது ஆட்டம் போடும் விசிலடிச்சான் குஞ்சுகளை நினைத்தால் தமிழகம் உருப்படுமா என்ற சந்தேகம் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பாலா இடஒதுக்கீடு தொடர்பான உங்கள் உரக்க சிந்தனை பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன் இன்னும் அது வரவில்லை, நீங்கள் அதை தடைசெய்திருந்தால் விட்டுவிடுங்கள், உங்கள் கவனத்திற்கு வரவில்லையென்றால் வெளியிடுங்கள்....
//
குழலி,
நீங்கள் குறிப்பிடும் பதிவுக்கு தங்கள் பின்னூட்டம் எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை. ஏதாவது குளறுபடி ஆகி விட்டதோ ? மீண்டும் பதிக்கவும். நன்றி.
ராகவன்,
//நான் ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி போட்ட பதிவை விட அதிகப்பட்சமாகவே ஈ.வே.ரா. அவர்கள் கூறியிருக்கிறார். ஆண் ஆசை நாயகி வைத்துக் கொள்கிறார், அதே போல பெண்ணும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
//
இதுவும் ஒரு வகை "முரட்டு வைத்தியமோ"? முள்ளை முள்ளால் எடுப்பது போன்ற ஒன்றை பெரியார் வலியுறுத்துயிருந்தாலும், இது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகத் தோன்றவில்லை !
//நான் கூறியதற்கு என்னை பற்றி பெண்ணைக் கூட்டிக் கொடுப்பவன் என்ற ரேஞ்சுக்கு பேசிய இறைநேசன் போன்றவர்கள் அதே மாதிரி பெரியாரைப் பற்றிக் கூறத் துணிவார்களா?
//
இறைநேசன் வலைப்பதிவர் என்றால், அவர் பதிவுகளை படித்ததில்லை.
//இது வெறும் நடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளாது ஆட்டம் போடும் விசிலடிச்சான் குஞ்சுகளை நினைத்தால் தமிழகம் உருப்படுமா என்ற சந்தேகம் வருகிறது.
//
இதில் என்ன சந்தேகம் வேண்டியிருக்கு சார் ;-)
Last but not the least, லக்கிலுக் எந்தப் பள்ளியில் படித்தார் என்று கண்டு பிடித்து விட்டீர்களா ????????
என்றென்றும் அன்புடன்
பாலா
ஆகவே, மணியம்மையாக நடிக்க பொருத்தமான, கறை படியாதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தங்கர்பச்சான் மனைவி, திருமாவளவன் அம்மா, ராமதாஸ் வீட்டுப்பெண்கள் இவர்களையெல்லாம் கேட்டுப்பார்க்கலாமா?
அப்பாவித் தமிழன் அவர்களே,
//மணியம்மை வேடத்துக்கு
பொடென்ஷியல் கேன்டிடேட்ஸ்:
1.குஷ்பு
2.சுஹாசினி
ரிஜடட். காரணம் : ஹி ஹி, சொல்லனுங்களா?
1. அஸின்,
2. நயன் தாரா,
3. கோபிகா
ரிஜடட். காரணம் : மேற்கண்ட யாரும் தமிழச்சி இல்லை என்பதால்.
4. த்ரிஷா.
ரிஜடட். காரணம் : என்ன விளையாடறீங்களா? இ.ஸி.ஆர் ரோட் மேட்டர் எல்லாம் கேட்டதே இல்லையா?
5. ஷ்ரேயா.
6. சமிக்ஷா.
7. ஜோதிகா
ரிஜடட். காரணம் : மறுபடியும்.... தமிழச்சி இல்லீங்கோ. (பேரப்பாரு, சமி'க்ஷா', 'ஷ்'ரேயா, 'ஜோ'திகா வாமுல்ல. சீர்திருத்த எழுத்து கொண்டு வந்த எங்ககிட்டயேவா)
7. பத்மப்ரியா.
தமிழா, மலையாளமா தெரியலையே? யோசிப்போமா?
ஐயையோ, வேண்டாம், வேண்டாம். 'நம்ம காட்டுல... மழ பெய்யுது...' :-)
அப்ப மிச்சமிருக்கற ஒரே தமிழச்சி நம்ம ஆச்சி தான். ஆனா தமிழ் பாதுகாப்பு குழு தங்கர் மச்சான் ஒத்துக்க மாட்டாரே.
//
இந்த மாதிரி சூப்பர் அனாலிஸிஸ் செய்வதற்கு எங்கு கற்றீர்கள் ;-) நீங்களா அப்பாவித் தமிழன் ? அதிமேதாவித் தமிழனல்லவா :)
//ஆகவே, மணியம்மையாக நடிக்க பொருத்தமான, கறை படியாதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், 'ஜாதகத்துடன்' (என்னதான் பெரியார் படமா இருந்தாலும், படம் நல்லா ஓடணும்னா இதெல்லாம் பாக்க வேணாம்களா) வரவேற்கப்படுகின்றன.
//
சிரிச்சு சிரிச்சு ஒரே வயிற்று வலிங்க :)
என்றென்றும் அன்புடன்
பாலா
மணியம்மை வேடத்துக்கு குஷ்புவைபோட்டு சிறுபான்மையினருக்கு சிறப்புச் சேர்த்தது போல
பெரியார் வேடத்துக்கு சத்யராஜைவிட மன்சூர் அலிகான்தான் சரி. சிறுபான்மையினருக்கு வாய்ப்புத்தர வேண்டாமா?
சிறுபான்மைகளின் சிறுத்தொண்டன்
அர்ஜூன் சிங்.
பாலா அவர்களே, இறை நேசனை படிக்காதலால் உங்களுக்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லைதான். இருப்பினும் நான் கூறியதை சுட்டியுடன் நிரூபிக்க வேண்டியது என் கடமை. ஆகவே, பார்க்க முக்கியமாக பின்னூட்டங்களுடன்:
http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html
லக்கிலுக் நான் எழுதியதற்கு பதில் கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. அதற்காக அவரைப் போய் மேலே கேள்வி கேட்பதாக இல்லை. அவரே என்னை நேரில் தொடர்பு கொண்டு பேசினால்தான் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிறுபான்மைகளின் சிறுத்தொண்டன்
அர்ஜூன் சிங்,
நன்றி !!!
இவனும் அப்பாவித்தமிழன்தான்,
//ஆகவே, மணியம்மையாக நடிக்க பொருத்தமான, கறை படியாதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தங்கர்பச்சான் மனைவி, திருமாவளவன் அம்மா, ராமதாஸ் வீட்டுப்பெண்கள் இவர்களையெல்லாம் கேட்டுப்பார்க்கலாமா?
//
நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும், உங்கள் கருத்து ஏற்புடையதல்ல ! நன்றி !
பத்மப்ரியா.
She is a brahmin, so no chance.
May be we can think in terms of
actresses like Lakshmi
Lakshmi - brahmin-rejected
srividhya ditto
sujatha rejected malayali
After all this I found one
potential candidate :)
Vijayakumari
Anonymous,
nanRi !
என்றென்றும் அன்புடன்,
பாலா அவர்களே,
இப்போழுது லேட்டஸ்ட் ஜெயமாலா, மீரா ஜாஸ்மின் தான். அவர்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
இட்லிவடை
Dear Idlyvadai,
//இப்போழுது லேட்டஸ்ட் ஜெயமாலா, மீரா ஜாஸ்மின் தான். அவர்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும்.
//
இதெல்லாம் ரொம்ப ஓவர் :)
பார்த்து, பெரியார் பக்தர்கள் பாஞ்சு குதறிடுவாங்க ;-)
ஏற்கனவே நிறைய சர்ச்சைகளில் மாட்டியிருக்கீங்க !
நன்றி !
I do not know whether you saw the latest issue of Junior Vikatan. Please read it. They have apologised for the article.
//லக்கிலுக் நான் எழுதியதற்கு பதில் கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. அதற்காக அவரைப் போய் மேலே கேள்வி கேட்பதாக இல்லை. அவரே என்னை நேரில் தொடர்பு கொண்டு பேசினால்தான் உண்டு.//
சமீபத்தில் (உண்மையாகவே சமீபத்தில்) டோண்டு சார் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது தகுந்த விளக்கம் கொடுத்திருக்கிறேன். நான் படித்த பள்ளி எந்த காலக்கட்டத்தில் இருந்தது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்றெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
//லக்கிலுக் நான் எழுதியதற்கு பதில் கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. அதற்காக அவரைப் போய் மேலே கேள்வி கேட்பதாக இல்லை. அவரே என்னை நேரில் தொடர்பு கொண்டு பேசினால்தான் உண்டு.//
சமீபத்தில் (உண்மையாகவே சமீபத்தில்) டோண்டு சார் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது தகுந்த விளக்கம் கொடுத்திருக்கிறேன். நான் படித்த பள்ளி எந்த காலக்கட்டத்தில் இருந்தது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்றெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
தாழ்ந்த குலத்தவர்களும் முன்னுக்கு வரவேண்டு என பெரியாரை விட போராடியவர் யாரும் இருக்கமுடியுமா? குலக்கல்விதிட்டத்தை எதிர்த்தவர் பெரியார். அத்திட்டம் சட்டமாகப்பட்டிருந்தால் இசைஞானி இசை அமைத்திருக்கமுடியுமா? அவரே பெரியாரின் படத்துக்கு இசையமைக்க மறுத்திவிட்டாராம். அவர் அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்கவேண்டும். அப்பதான் புத்தி வருமோ?
பெரியார் இல்லாவிட்டால் நம்மை போன்ற தமிழர்களின் நிலைமையை எண்ணி பார்க்கவே அச்சமாக உள்ளது ஒற்றுன்ணி போல உயிரை உறிஞ்சிய ஓனாங்களை ஓட ஓட விரட்டிய சாதனையாளர் அவர் . படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவரது கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் மறுபடியும் தலை தூக்கியுள்ள புற்று நோய்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் !.
Post a Comment